எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

ஹோட்டல் கொரோனா

எருசலேமிலுள்ள டான் ஹோட்டல், 2020ல் ஹோட்டல் கொரோனா என்ற வேறு பெயரில் அறியப்பட்டது. கோவிட்-19 லிருந்து மீண்டுவரும் நோயாளிகளுக்கு இது சமர்ப்பிக்கப்பட்டு, இப்படி ஒரு கடினமான நேரத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொடுக்கக்கூடிய ஒரு அபூர்வ இடமாக இந்த ஹோட்டல் இருந்தது. அங்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே தொற்று இருந்ததால், அவர்கள் எல்லோரும் ஒன்றாக பாடி, நடனமாடி, மகிழ சுதந்திரமாக விடப்பட்டனர். அவர்களும் அதைச் செய்தனர்! வெவ்வேறு அரசியல் மற்றும் ஆன்மீகக் குழுக்களுக்கிடையே பதட்டங்கள் அதிகமாகக் காணப்படும் ஒரு நாட்டில், மக்கள் முதலாவதாக, ஒருவரையொருவர் மனிதனாகப் பார்த்து நண்பர்களாய் பழக கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தளமாக இப்படிப்பட்ட நெருக்கடி உருவாக்கியது. 

நம்மைப் போலவே அனுபவமும் மதிப்பும் உள்ள மக்களிடம் நாம் ஈர்க்கப்படுவது இயற்கையானது, இயல்பானதும் கூட. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வலியுறுத்தியது போல, மனிதர்களுக்கிடையே ஏற்படும், நாம் இயல்பானது என்று பார்க்கும், ஏதாவது தடுப்புச்சுவர்களிடையே, சுவிசேஷம், ஒரு சவாலானது. 2 கொரிந்தியர் 5:15. சுவிசேஷம் என்னும் கண்ணாடி மூலம், நம்முடைய வேறுபாடுகளை விட, பகிர்ந்துக் கொள்ளப்பட்ட முறிவு மற்றும் ஏக்கம், குணமடைவதற்கு தேவனுடைய அன்பு தேவை என்ற பெரிய விஷயங்களைப் பார்க்கிறோம். 

“எல்லாருக்காகவும் ஒருவரே மரித்தார்” என்று நாம் விசுவாசித்தால், மற்றவர்களைப் பற்றிய மேலோட்டமான அனுமானங்களைக் குறித்து நாம் மனநிறைவடையவும் முடியாது. மாறாக, அவருடைய அன்பையும், அவர் மேற்கொண்ட பணியையும், நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு, தேவன் நேசிப்பவர்களுடன், (நாம் அனைவரையும்), பகிரவும், “கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது” (வச. 14).

பயமில்லா அன்பு

நம்முடைய நினைவை விட்டு எப்போதுமே நீங்காத சில பிம்பங்கள் உண்டு. வேல்ஸ் நாட்டின் மறைந்த இளவரசியான டயானாவின் பிரபல புகைப்படத்தை பார்வையிட்டபோது நானும் அப்படியே உணர்ந்தேன். முதல் பார்வையில் அந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாய், இயல்பான புன்சிரிப்போடு இளவரசி டயானா, யாரோ ஒருவரின் கைகளை குலுக்கியபடி நின்றிருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தின் பின் கதை ஆச்சரியமானது. 

ஏப்ரல் 19, 1987 அன்று இளவரசி டயானா லண்டனின் மிடில்செக்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டார். எயிட்ஸ் வியாதி தீவிரமாய் பரவி இங்கிலாந்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த தருணம் அது. அந்த கொடிய நோய் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருந்தது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்களாய் கருதினர். 

இந்த தருணத்தில் எந்த கையுறையும் அணியாமல் ஒரு எயிட்ஸ் நோயாளியை புன்சிரிப்புடன் கைகுலுக்கிய இந்த தருணம் ஆச்சரியப்பட வைத்தது. அந்த புகைப்படம், எயிட்ஸ் நோயாளிகளை அதே கனிவுடனும் பரிவுடனும் ஆதரிக்க வேண்டும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. 

நான் அடிக்கடி மறக்கிற ஒன்றை அந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு இலவசமாய் தாராளமாய் கொடுக்கவேண்டும். பயந்துகொண்டே நாம் காட்டுகிற அன்பு, மரணத்தில் வாழ்வதற்கு சமானம் (1 யோவான் 3:14) என்று யோவான் ஆதி கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். உண்மையான அன்போடு, பயமின்றி, தன்னையே கொடுக்கும் தியாகமான அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்டவர்களாய் உயிர்த்தெழுந்த ஜீவியத்தை வாழ்வதற்கும் உற்சாகப்படுத்துகிறார் (வச. 14,16). 

தேவனுடைய மீட்பின் வழி

ஆங்கில இசையின் புகழ்பெற்ற “சிறந்த நாடகக் கலைஞன்” என்ற பாடலானது, அதின் முக்கிய கதாபாத்திரத்தினால், தன் குடும்பத்தையும் சிநேகிதர்களையும் காயப்படுத்தியதைக் குறித்து சுயஉணர்வு அடைந்து பாடப்படுகிறது. அந்த பாடல் தன் சொந்த வீட்டிற்கு திரும்புவதின் மகிழ்ச்சியையும், தன்னிடத்தில் உள்ளதே போதுமானது என்ற நிறைவையும் கண்டறிவதாக அமைந்துள்ளது. 

ஓசியா புத்தகமும் அதேபோன்று தான் முடிகிறது. அதில் தன்னிடமாய் திரும்புபவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் தருவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். புத்தகத்தின் பெரும்பான்மை, தேவனுக்கும் அவருடைய ஜனத்திற்குமான உறவை துரோகம் செய்யும் ஒரு மனைவியோடு ஒப்பிட்டு, தேவனை நேசிக்கவும் அவருக்காய் வாழவும் தவறின இஸ்ரவேலின் தோல்வியை முன்வைக்கிறது. 

14ஆம் அதிகாரத்தில் தேவனை ஏமாற்றியதை எண்ணி இருதயம் உடைக்கப்பட்டவர்களாய் அவரிடத்தில் திரும்புபவர்களுக்கு, தேவனுடைய அளவில்லாத அன்பு, கிருபை மற்றும் மீட்பு ஆகியவைகள் இலவசம் என்னும் நம்பிக்கையின் செய்தி முன்வைக்கப்படுகிறது (வச. 1-3). “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்” என்றும் “அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” என்றும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 4). தேவனுடைய கிருபை பனியைப்போல் பொழிந்து, லீலிப் புஷ்பத்தைப்போலவும் தானிய விளைச்சலைப்போலவும் செழிக்கப்பண்ணி, சீர்படுத்தமுடியாத உறவை மீண்டும் புதுப்பித்து திருப்பதியாக்குகிறது (வச. 5-7). 

நாம் யாரையாவது காயப்படுத்தினதுண்டானால், அல்லது நம்முடைய வாழ்வில் தேவனுடைய இரக்கத்தை நமக்குச் சாதகமாய் பயன்படுத்திக்கொண்டாலோ, நமக்கு அளிக்கப்பட்ட நல்ல வரங்களை காலாகாலத்திற்கும் பாழாக்குகிறோம். ஆனால் தாழ்மையோடு அவரிடத்திற்குத் திரும்பினால், அவருடைய அன்பு எப்போதும் நம்மை அரவணைத்து, நம்முடைய வாழ்க்கையை சீரமைப்பதை நாம் பார்க்கமுடியும்.

தேவனுடைய பாதுகாப்பு

ஊசி, பால், காளான், லிஃப்ட், பிறப்பு, தேனீ, போன்று எதை கண்டாலும் பயப்படும் ஆட்ரியன் மாங்க், “மாங்க்” என்று அவரின் பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் முக்கியக் கதாப்பாத்திரம். அதில் அவரைப் போன்றே பயப்படும் துணை கதாப்பாத்திரமான ஹெரால்ட் க்ரென்ஷாவுடன் ஒரு காரின் பின்பெட்டியில் அடைத்துவைக்கப்படுகிறார். தன்னுடைய பயங்கள் வரிசையில், கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் சிறிய இடத்தில் சிக்கிக்கொண்டதினால் ஏற்படும் பயத்திலிருந்து மாங்க் அன்று விடுவிக்கப்படுகிறார்.

மாங்க் மற்றும் ஹெரால்ட் ஆகிய இருவரும் அந்த காரின் பின்பெட்டியில் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது, மாங்கிற்கு ஓர் தீடீர் எண்ணம் உதிக்கிறது. “நாம் இதை தவறான பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று மாங்க் கூறுகிறார். “நம்மை அடைத்து வைத்திருக்கிற இந்த பெட்டி, நம்மை மூடவில்லை, உண்மையில் அது நம்மை பாதுகாக்கிறது; வெளியிலிருக்கும் கிருமிகள், பாம்புகள், சத்தங்கள் ஆகியவற்றிலிருந்து இது நிஜமாகவே நம்மை பாதுகாக்கிறது” என்று மாங்க் கூற, ஆச்சரியத்தில் ஹெரால்ட் தன் கண்களை அகல விரித்து, “அப்படியென்றால், இந்த பெட்டி நமது நண்பன்” என்று மெல்லமாக கூறுவதாக கதை அமைக்கப்படுகிறது.

சங்கீதம் 63இல் தாவீதுக்கும் இதேபோன்ற ஒரு வெளிப்பாடு கிடைக்கிறது. “வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்திலே” இருந்தபோதும், தாவீது கர்த்தருடைய வல்லமையையும் மகிமையையும், கிருபையையும் பார்க்கிறான் (சங். 63:1-3). அந்த வறண்ட பாலைவனத்தையும் தேவன் தனக்கு ஏற்படுத்திய பாதுகாப்பான இடமாய் உணருகிறான். ஒரு பறவைக்குஞ்சு தன் தாயின் சிறகுகளின் கீழ் அடைக்கலம் புகுவதுபோல, தாவீது தேவனிடத்தில் அடைக்கலம் புகுகிறான். வனாந்திரமான அந்த இடத்திலும், “நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல” (வச. 5) தன் ஆத்துமா திருப்தியாகிறது என்றும் “ஜீவனைப்பார்க்கிலும்” (வச. 3) மேலான கிருபையினால் பெலமும் உற்சாகமும் அடைகிறான்.

சரியான சொற்கள்

கடந்த ஆண்டுகளில், பல எழுத்தாளர்கள், விசுவாசம் என்ற வார்த்தையின் "சொற்பொருளை" புதியதாகப் பார்க்கும்படி விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளனர். ஒரு எழுத்தாளர், இறையியல் ரீதியாக மேன்மையான விசுவாச வார்த்தைகள் கூட அதிகப்படியான பிரபல்யத்தாலும் மற்றும் அதிகப்படியான பயன்பாட்டாலும் அவற்றின் தாக்கத்தை இழக்க நேரிடும் என்று உதாரணமாக வலியுறுத்தினார், சுவிசேஷத்தின் ஆழத்தையும், தேவன் நமது தேவையாய் இருக்கிறார் என்பதன் தொடர்பை இழக்கிறோம். அது நிகழும்போது, ​​விசுவாசத்தின் மொழியை “தொடக்கத்திலிருந்து”  கற்க்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார், முதன்முறையாக நற்செய்தியைக் காணும் வரை நம் அனுமானங்களை விட்டுவிடலாம்.

"புதிதாக தேவனைப் பேச" கற்றுக்கொள்வதற்கான அழைப்பு, பவுலை நினைவூட்டுகிறது, அவர் தனது வாழ்க்கையை "எல்லா மக்களுக்கும் எல்லாவற்றையும்" அர்ப்பணித்தார். . . சுவிசேஷத்திற்காக ”(1 கொரிந்தியர் 9: 22–23). இயேசு செய்ததை எவ்வாறு எடுத்துரைக்கலாம் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் ஒருபோதும் கருதவில்லை. அதற்கு பதிலாக, அவர் தொடர்ச்சியான ஜெபத்தை நம்பியிருந்தார், மேலும் சக விசுவாசிகளும் அவருக்காக ஜெபிக்கும்படியும் - நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள “சரியான வார்த்தைகளை” (எபேசியர் 6:19 ) கண்டுபிடிக்க உதவுமாறும் கெஞ்சினார்.

கிறிஸ்துவில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும் அவருடைய அன்பில் ஆழமாக வேரூன்ற ஒவ்வொரு நாளும் தாழ்மையும் ஏற்றுக்கொள்ளுதலும் தேவை என்பதட் அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தனர் (3: 16–17). ஒவ்வொரு நாளும் தேவனின்  அன்பில் நம் வேரூன்றுவதனால் மட்டுமே, அவருடைய கிருபையின் மீது சார்ந்திருப்பதைப் பற்றி அதிகம் அறிகிறோம், அவர் நமக்காகச் செய்ததைப் பற்றிய ஆச்சரியமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள சரியான சொற்களைக் கண்டுபிடிக்கிறோம்.

எங்களின் மோசமான நிலையில்

"அவள் சகிக்கக்கூடியவள், ஆனால் என்னை சோதிக்கும் அளவுக்கு அழகானவள் அல்ல. " ஜேன் ஆஸ்டனின் பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸில் திரு.டார்சி உச்சரித்த இந்த வாக்கியதால், அந்த நாவலையும் அதன் மீது எனக்கு ஏற்பட்ட தாக்கத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஏனென்றால், அந்த ஒரு வாக்கியத்தைப் படித்த பிறகு, நான் ஒருபோதும் திரு.டார்சியை விரும்ப மாட்டேன் என்று உறுதியாக முடிவு செய்தேன்.

ஆனால் நான் தவறு செய்தேன். ஆஸ்டனின் கதாபாத்திரமான எலிசபெத் பென்னட்டைப் போலவே, மெதுவாகவும், மிகவும் தயக்கமின்றி-என் மனதை மாற்றிக்கொள்ளும் தாழ்மையான அனுபவம் எனக்கு இருந்தது. அவளைப் போலவே, டார்சியின் தன்மையை முழுவதுமாக அறிந்து கொள்ள நான் விரும்பவில்லை; அவரது மோசமான தருணங்களுக்கான எனது எதிர்வினையைப் பற்றிக்கொள்ள தெரிந்தெடுத்தேன். நாவலை முழுமையாக படித்து முடித்த பிறகு, நிஜ உலகில் அதே தவறை நான் யாருக்கு செய்தேன் என்று யோசித்தேன். விரைவான முடிவை நான் எடுக்காமட்டேன் என்பதால் நான் எந்த நட்பை இழந்தேன்?

மோசமான நிலையில், இயேசுவை விசுவாசிக்கும் உள்ளம் நம்முடைய இரட்சகரால் காணப்பட்ட, நேசிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுபவம் ஆகும்.(ரோமர் 5: 8; 1 யோவான் 4:19). கிறிஸ்துவில் நாம் உண்மையிலேயே யார் என்பதற்காக நம்முடைய பழைய, பொய்யான விஷயங்களை நாம் அர்ப்பணிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்வதில் ஆச்சரியம் இருக்கிறது (எபேசியர் 4: 23-24). நாம் இனி தனியாக இல்லை, ஆனால் நாம் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதி, “அன்பின் வழி” - உண்மையான, நிபந்தனையற்ற அன்பில்  நடக்கக் கற்றுக்கொள்பவர்களின் “சரீரம்” என்பதைப் புரிந்துகொள்வதில் மகிழ்ச்சி. (5: 2)

கிறிஸ்து நமக்காகச் செய்ததை நாம் நினைகூரும்போது (வச.. 2), அவர் நம்மைப் பார்க்கும் விதத்தில் மற்றவர்களை எப்படிப் பார்க்காமல் இருக்க முடியும்?

சிறியது ஆனால் வலியது

வட அமெரிக்காவின் கடுமையான சோனோரன் பாலைவனத்தின் நள்ளிரவு நேரங்களில் அங்கு, ஒரு உயர் தொனியில், மங்கலான அலறலை ஒருவரால் கேட்க முடியும். ஆனால் ஒலியின் மூலத்தை நீங்கள் சந்தேகிக்க மாட்டீர்கள். - சிறிய மற்றும் வலிமைமிக்க வெட்டுக்கிளி சுண்டெலி, நிலவொளியில் அதன் எல்லையை வரையறுக்க அலறும்.

இந்த தனித்துவமான கொறித்துண்ணி (“ஓநாய் சுண்டெலி” என அழைக்கப்படுகிறது) மாமிச உண்ணியாகும். சொல்லபோனால், சிலர் மோத பயப்படும் தேள் போன்ற உயிரினங்களை இது வேட்டையாடுகிறது. ஆனால் ஓநாய் சுண்டெலி இந்த குறிப்பிட்ட யுத்தத்திற்கு தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டுள்ளது. இது தேள் விஷத்திற்கு எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அந்த விஷத்தை வலி நிவாரணியாக மாற்றவும் முடியும்!

இந்த விழிப்புணர்வுடைய சிறிய சுண்டெலியானது  தப்பிப்பிழைப்பதற்கும், அதன் கடுமையான சூழலில் செழித்து வளருவதற்கும் உருவாக்கப்பட்ட அதன் தனித்தன்மைமையில் ஊக்கப்படுத்தும் ஏதோ ஒன்று உள்ளது. பவுல் எபேசியர் 2: 10 ல் விளக்குவது போல, அந்த வகையான அற்புதமான கைவினைத்திறன் தேவனின் ஜனங்களுக்கான அவருடைய திட்டத்தின் பண்புகளை விளக்குகிறது. நாம் ஒவ்வொருவரும் இயேசுவில் தேவனுடைய கரத்தின் கிரியைகளாக அவருடைய ராஜ்யத்திற்கு பங்களிக்க தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். தேவன் உங்களுக்கு எப்படி பரிசளித்திருந்தாலும்சரி, கொடுப்பதற்கு உங்களிடம் அதிகம் உள்ளது. நீங்கள் யாராக இருக்கும்படி தேவன் உங்களை உண்டாக்கினாரோ, அதை நம்பிக்கையுடன் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அவரிலுள்ள ஜீவனின் நம்பிக்கை மற்றும் சந்தோஷத்திற்கு உயிருள்ள சாட்சிகளாய் இருப்பீர்கள்.

உங்கள் சொந்த வாழ்க்கையில் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் காரியங்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது ​​தைரியம் கொள்ளுங்கள். நீங்கள் சிறுமையாக உணரலாம். ஆனால் ஆவியானவரின் பரிசு மற்றும் பெலப்படுத்துதல் மூலம் வல்லமையான காரியங்களைச் செய்ய தேவன் உங்களைப் பயன்படுத்த முடியும்.

கற்பனை செய்ய முடியாத வாக்குறுதிகள்

மிகப் பெரிய தோல்வியின் தருணங்களில், நோக்கம் மற்றும் மதிப்புள்ள வாழ்க்கையில் நமக்கு கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டோம், எங்களுக்கு மிகவும் தாமதமாகிவிட்டது என்று நம்புவது எளிதானது. அதிகபட்ச பாதுகாப்புச் சிறையில் முன்னாள் கைதியாக இருந்த எலியாஸ் தான் ஒரு கைதியாக இருந்த போது அவருக்கு இருந்த உணர்வை விவரித்தார். “நான் உடைத்துவிட்டேன்… வாக்குறுதிகள், என் சொந்த எதிர்கால வாக்குறுதி, நான் என்னவாக இருக்க முடியும் என்பதற்கான வாக்குறுதி.”

பார்ட் கல்லூரியின் "சிறை முயற்சி" கல்லூரி பட்டப்படிப்பு திட்டம்தான் எலியாஸின் வாழ்க்கையை மாற்றத் தொடங்கியது. நிகழ்ச்சியில் இருந்தபோது, ​​அவர் ஒரு விவாதக் குழுவில் பங்கேற்றார், இது 2015ல் ஹார்வர்டில் இருந்து ஒரு அணியை விவாதித்து வென்றது. எலியாஸைப் பொறுத்தவரை, “அணியின் ஒரு பகுதியாக இருப்பது… இந்த வாக்குறுதிகள் முற்றிலுமாக இழக்கப்படவில்லை என்பதை நிரூபிக்கும் ஒரு வழியாகும்.”

 இயேசுவில் தேவனின் அன்பின் நற்செய்தி நமக்கும் ஒரு நல்ல செய்தி என்பதை நாம் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது இதேபோன்ற மாற்றம் நம் இதயத்திலும் நிகழ்கிறது. இது மிகவும் தாமதமாகவில்லை, என்பதை நாம் ஆச்சரியத்துடன் உணர ஆரம்பிக்கிறோம். தேவன் எனக்கு இன்னும் எதிர்காலத்தை வைத்திருக்கிறார்.

 இது ஒரு எதிர்காலம், சம்பாதிக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ முடியாது, இது தேவன் அபரிமிதமான கிருபையையும் சக்தியையும் மட்டுமே சார்ந்துள்ளது (2 பேது. 1:2-3). உலகத்திலும் நம் இருதயத்திலும் உள்ள விரக்தியிலிருந்து நாம் விடுவிக்கப்பட்ட ஒரு எதிர்காலம், அவருடைய “மகிமையும் நன்மையும்” நிறைந்த ஒன்றாகும் (வச. 3). கிறிஸ்துவின் கற்பனைக்கு எட்டாத வாக்குறுதிகளில் எதிர்காலம் பாதுகாப்பானது (வச. 4); எதிர்காலம் “தேவனுடைய பிள்ளைகளின் சுதந்திரம் மற்றும் மகிமை” ஆக மாற்றப்படுகிறது (ரோம. 8:21).

மன்னிப்புடன் ஒரு எதிர்காலம்

1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தேசத்தின் அரசு நிறவெறி அமைப்பிலிருந்து ஒரு புதிய ஜனநாயக திட்டத்தை அமல்படுத்தியது. இனப் பிரிவினையில் இருந்து (கருப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் பிரிந்து வாழ்ந்தது) ஒன்றிணைந்த மக்களாட்சிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த வருடங்களில் இனப்பிரிவினால் நடந்த குற்றங்களை எப்படி கையாள்வது என்பதை புதிய அரசாங்கத்தால் முடிவு எடுக்க முடியவில்லை.. இருப்பினும் தேச தலைவர்களால் கடந்த கால குற்றங்களை விட்டு விடவும் முடியவில்லை ஆனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பது அந்த தேசத்தின் காயங்களை ஆழமாகிவிடும். தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயரான டெஸ்மன்ட் டுட்டு தனது “No Future Without Forgiveness” (மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை ) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் “நமக்கு சுலபமாக கிடைத்திருக்கலாம், பழிவாங்கும் நீதி கூட கிடைத்திருக்கும் ஆனா தென் ஆபிரிக்க முழுவதுமாக அழிந்திருக்கும்” என்று.

அந்த புதிய ஜனநாயக அரசு அமைத்த “உண்மை மற்றும் வேற்றுமையை அகற்றும்” குழு ஒன்றை அமைத்து உண்மை, நீதி, இரக்கத்தின் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது. தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினவர்களுக்கு மறுசீரமைப்பிற்கான வழி வழங்கப்பட்டது. தைரியமாக உண்மையின் எதிர்கொண்டதால் அந்த தேசத்தால் குணமடைய முடிந்தது.

ஒருவிதத்தில், தென் ஆப்பிரிக்காவின் சங்கடங்கள் நமது போராட்டங்களையும் பிரதிபலிக்கலாம். நீதியையும் இரக்கத்தையும் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் (மீகா6:8), ஆனால் அநேக நேரங்களில் இரக்கம் என்பது பொறுப்பில்லாத தன்மையாகவும், நீதிக்காக பின்தொடர்வது பழி வாங்குவதாகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

தீமையை வெறுக்கும் அன்பை உடையவர்களாய் மாத்திரம் இல்லாமல் (ரோ 12:9) நம்மோடு இருப்பவர்களின் மறுரூபமாகுதலையும் விரும்புபவராக இருக்க வேண்டும் (ரோ 13:10). இயேசுவின் ஆவியானவரின் வல்லமையால் தீமையை நன்மையால் மேற்கொள்வது என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் (12:21).